விரைவில் அறிமுகமாகிறது பி.எம்.டபிள்யூ ஸ்கூட்டர்

வாகன உலகம், எதிர்காலத்தில் சந்திக்க இருக்கும் எரிபொருள் சவால்களுக்கு ஏற்றபடி, பி.எம்.டபுள்யூ நிறுவனம் இந்த ஆண்டில் மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த ஆண்டில் பி.எம்.டபிள்யூ சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை வெளியிடுகிறது.
இத்தாலியில் பழங்கால கார்களுக்கான கண்காட்சி தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது, அப்போது பி.எம்.டபுள்யூ நிறுவனம் மோட்டார்ராட் கருத்தின் அடிப்படையில் அது உருவாக்கவுள்ள மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.

நகர பயன்பாட்டை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்படவுள்ளது.

இதில் செராமிக் எல்.இ.சி விளக்கு முகப்பில் அமைக்கப்படுகிறது, ஆங்கில ”சி” எழுத்து வடிவத்திலான விளக்குகள் பின்புறத்தில் அமைக்கப்படுகிறது.

இதனுடைய இருக்கைகளில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாற்றக்கூடிய சிறப்பம்சம் உள்ளது, தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் இதில் உள்ளது.

டிஸ்பிளேயில் வண்டியின் வேகம், போகும் பாதை மற்றும் ஹேண்டில் பார்களை பயன்படுத்தும் முறை ஆகியவை உடனே திறையில் தோன்றும்.

அட்டகாசமான தோற்றம், தொழில்நுட்பத்தில் தயாராக உள்ள பி.எம்.டபிள்யூ மோட்டார் ரெட் கான்செப்ட் ஸ்கூட்டரின் விற்பனை குறித்த விபரங்களை பி.எம்.டபுள்யூ நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rate this item
(0 votes)

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Videos