iPhone 7 Plus விற்பனையில் கொடி கட்டிப் பறக்கும் ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone 7, iPhone 7 Plus ஆகிய இரு ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்தமை தெரிந்ததே.

பல சிறப்பம்சங்களைக் கொண்டு அறிமுகமான இக் கைப்பேசிகளுக்கு பயனர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இதன் அடிப்படையில் இவற்றுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட iPhone 6, iPhone 6 Plus ஆகிய கைப்பேசிகளை விட அதிகமாக விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான டிம் கூக் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அதிகளவு விற்பனையாவதற்கு iPhone 7 Plus கைப்பேசியில் தரப்பட்டுள்ள கமெராவே மிகவும் பிரதான காரணமாக விளங்குகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியில் டுவல் கமெரா வசதி தரப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே.

Rate this item
(0 votes)

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Videos