மகிந்தவிற்கு பொதுபலசேனாவின் பதிலடி : ஞானசாரர் ஓடி ஒளியவில்லை! வெளிவருவார்

ஞானசாரரை அரசு ஒளித்து வைத்துள்ளதாக மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். இது போன்று சிறுபிள்ளைத்தனமான கருத்துகளை மகிந்த தெரிவிக்க வேண்டாம் என பொதுபலசேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் தொடர்ந்த அவர்,

ஞானசாரரை யாரும் ஒளித்து வைக்கவும் இல்லை, அவர் மறைந்தும் இருக்கவில்லை என்பதே உண்மை.

மகிந்த ராஜபக்ச மீது நாம் மரியாதை வைத்துள்ளோம். ஆனால் அவர் கூறியுள்ளார், ஞானசாரரை அரசு ஒளித்து வைத்துள்ளதாக, தயவு செய்து இது போன்ற கருத்துகளை வெளியிட வேண்டாம்.

விமல் வீரவன்ச போன்றோர் இவ்வாறு தெரிவித்தால் பரவாயில்லை. ஆனால் மகிந்த ராஜபக்ச நன்றாக அரசியல் தெரிந்தவர். அத்தோடு நாட்டின் ஜனாதியாக இருந்த நீங்கள் 2ஆம் தரத்தில் கல்வி பயிலும் சிறு பிள்ளை போன்று கருத்துகளை வெளியிட வேண்டாம்.

ஞானசாரர் நீதியை விட்டு விலகி ஓடவில்லை, அவற்றிக்கு முகம் கொடுப்பதற்காக அவர் வெளிவருவார்.

மேலும், திஸ்ஸ விதாரன கூறியது போல் சம்பிக்க ரணவக்க ஞானசாரரை ஒளித்து வைக்கவில்லை. அதே போன்று விஜயதாச ராஜபக்சவும் அவரைக் காப்பாற்றிக் கொண்டு வரவில்லை.

இதேவேளை மகிந்தவும், ரணில் விக்ரமசிங்கவும் முஸ்ஸிம் மக்களின் வாக்குகளுக்காக அலைகின்றனர். இவர்கள் முஸ்ஸிம்களுடன் இணைந்து செயற்பட தயாராகி வருகின்றனர்.

இவர்கள் மூலமாக பௌத்தத்திற்கு எந்த இலாபமும் இல்லை என்பதே உண்மை எனவும் திலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

 
Rate this item
(0 votes)

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.