பொறியியலாளர் ஹுமைட் றசூல் கனேடிய சாரணர் சங்கத்தின் Deputy Council Commissioner (Recognition) ஆக பதவியுயர்வு

மருதமுனையின் புதல்வர்களில் ஒருவரான பொறியியலாளர் ஹுமைட் றசூல், கனேடிய சாரணர் சங்கத்தின் Deputy Council Commissioner (Recognition) ஆக ஏப்ரல் 02, 2017 ல் பதவியுயர்வு பெற்றுள்ளார்.

Scouts Canada வில் பல முக்கிய பதவிகளை வகித்த இவர், இறுதியாக Deputy Area Commissioner (New Member Support) ஆக, தனது சிறந்த ஆளுமை மூலம் பல Area Interview Scouters ஐ வழிநடாத்தி, சிறந்த சாரணிய தலைவர்கள் பலரை உருவாக்கியுள்ளார்.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடான கனடாவில், Scouts Canada வினால் இவ்வாறான உயர் பதவியில் அமர்த்தப்படும் முதலாவது தென்கிழக்கு ஆசிய நாட்டவர் எனும் பெருமையை ஹுமைட் இந்தப் பதவியின் மூலம் தட்டிக் கொள்கிறார்.

கனேடிய சாரணர்களுக்கும், சாரண தலைவர்களுக்கும் அவர்களின் திறமைக்கும், விஷேட சேவைக்குமாக ஆண்டுதோறும் கௌரவப் பட்டங்களும், பதக்கங்களும் வழங்கப்படுவது மரபு. இவ்வாறான பதக்கங்களும், பட்டங்களும் வழங்கும் குழுவை வழிநடாத்தும் பாரிய பணியை, இந்தப் பதவியின் மூலம் ஹுமைட் பொறுப்பேற்றுள்ளார்.

கல்முனை கார்மேல் பாத்திமாவில் தனது சாரணிய வாழ்க்கையை ஆசிரியர்கள் M.I.M. முஸ்தபா மற்றும் சிவானந்தராஜா ஆகியோரின் வழிகாட்டலுடன் ஆரம்பித்த ஹுமைட், அல்-மனாரில் மாவட்டத்தின் முதலாவது ஜனாதிபதி சாரணராக அதிபர்கள் நவாஸ், உமர் மௌலானா மற்றும் அபூபக்கர் ஆகியோரின் உந்துதலுடனும், வழிகாட்டலுடனும் சூடிக்கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

சமூக சேவையில் தீவிர ஈடுபாடுடைய ஹுமைட், கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் பல தேசிய விருதுகளை வென்றுள்ளார்

Rate this item
(0 votes)

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Videos