கட்டாரிலுள்ள இலங்கையர்களிற்கு நெருக்கடி நிலைமை உக்கிரமடைந்தால்

கட்டார் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை உக்கிரமடைந்தால், இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்டாரிலுள்ள இலங்கைக்கான தூதுவர் ஏ.எஸ்.பீ. லியனகே தெரிவித்துள்ளார்.

இதற்காக வேண்டி இலங்கையர்களின் 22 அமைப்புக்களுக்கு அழைப்புவிடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் சகல தரப்பினருடனும் ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது கட்டாரிலுள்ள இலங்கையர்களின் தொழில்கள் தொடர்பில் எந்தவித எச்சரிக்கைகளும் இல்லையெனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

Rate this item
(0 votes)

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.