இலங்கையருக்கு ஏற்பட்ட நிலை!! கனடா உச்ச நீதிமன்றத்தின் அடுத்த நடவடிக்கை

கனடாவில் அகதி அந்தஸ்த்துப் பெற்று நிரந்தர குடியுரிமை பெற்றவர்களதும், அந்த நாட்டின் பிரஜைகளுக்கு ஒப்பாக நடத்தப்பட வேண்டும் என்று கனடாவின் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த நஸ்ரீன் அஹமட் மொஹமட் நிலாம் என்ற 36 வயதானவர், 2008ம் ஆண்டு கனடா சென்று, 2011ம் ஆண்டு குடியுரிமைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, அவர் 2010ம் ஆண்டிலும், 2011ம் ஆண்டிலும் இரண்டு தடவைகள் இலங்கைக்கு வந்து, கனடா திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மீண்டும் இலங்கைக்கு பிரவேசித்து பாதுகாப்பாக கனடா திரும்பியதானது, அவருக்கு இலங்கையில் அச்சுறுத்தல் இல்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

இந்த நிலையில், கடந்த 2012ம் ஆண்டு கனடாவின் முன்னாள் அரசாங்கம் ஏற்படுத்திய அகதிகள் சட்டத்திருத்தங்களின் அடிப்படையில், அவரது குடியுரிமையை பறித்து நாடுகடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இடம்பெறுகின்ற நிலையில், நிரந்தர குடியுரிமை பெறுகின்ற அகதிகள், கனடாவின் பிரஜைகளுக்கு ஒப்பாகவே நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான மீளாய்வை உச்ச நீதிமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமை மேற்கொள்ளவிருப்பதாகவும் கனடாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Rate this item
(0 votes)

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.