மருதமுனைக் குளங்களின் அவல நிலை

இங்கே நீங்கள் காண்பவை மருதமுனை மண்ணில் அமையப் பெற்றுள்ள குளங்களின் அசூசி, அவல நிலைகளே இவை.
மனிதாபிமானமற்ற, மூடர்களினால் மேற்கொள்ளப்படும் ஈனச் செயல்களே இவை.
இச் செயல்களினால் இப்பிரதேச சூழல் பாதிக்கப்படுவதுடன், துர்வாடை வீசுகின்றது, அதுமட்டுமல்லாது, எமது மருதமுனை மண்ணில்,  ஆட்கொல்லி நோய்களான டெங்கு, வாந்தி பேதி, சுவாசக் கோளாறு என்பன வெகு வேகமாகப் பரவும் அபாய நிலை வெகு தூரம் இல்லை.
கிண்ணியா மண்ணிற்கு ஏற்பட்ட அவல நிலை எமது பிரதேசத்திற்கும் ஏற்படுவதற்கு முன்னராகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளினையும், பாதுகாப்பான முன்னேற்பாடுகளினையும் மேற்கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பும், கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக உண்டு.
"வந்த பின் அவஸ்தையும், அல்லலும் அனுபவிப்பதனை விட, வருமுன் காப்பதே அறிவுடமையாகும் "
இரு குளங்களினையும் அண்மித்து மக்கள் குடியிருப்புக்கள், பாடசாலைகள், வைத்திய சாலை, பள்ளி வாயல்கள், மத்ரஸா என்பன அமையப் பெற்றிருப்பதனை கருத்தில் கொண்டு, எமது மருதமுனை புத்திஜீவிகள், அரச உத்தியோகத்தர்கள், அரசியலாளர்கள், அப்பிரதேச மக்கள்,  நிறுவனங்களின் நிர்வாகிகள், தொண்டுப்பணிகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள், வர்த்தகர்கள், உலமாக்கள் அனைவரும் மிக விரைவில் ஒன்றிணைந்து இவற்றுக்கு முன்வருதல், காலத்தின் தேவையும், எம் மண்ணிற்கு புரியும் மகத்தான பணியுமாகும்.
 
சதஹதுல்லாஹ்
Rate this item
(0 votes)

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.