கிழக்கில் வெகுவாக பரவி வரும் #டெங்கு எனும் ஆட்கொல்லி நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..

முதலில் நாங்கள் ஒன்றினை தெரிந்து கொள்ள வேண்டும்.டெங்கு நோய்க்கு இதுவரை தீர்க்கமான நுண்னுயிர்கொல்லி/antibiotic இல்லை.வைத்திய அவதானிப்பின் கீழ் திரவங்களை பிரதியீடு செய்தல் என்ற சிகிச்சை முறை மூலமே டெங்கு வைத்தியம் மேட்கொள்ளப்படுகிறது.(fluid resuscitation therapy under medical observation)

உண்மையிலேயே டெங்கு நுளம்புகளில் காணப்படும் abovirus ஆனது எமது குருதிக்கலன்களான நாடி மற்றும் நாளம் என்பவற்றின் ஊடுபுகவிடும் தன்மையினை அதிகரிக்கும் மற்றும் குருதி உறைதலுக்கு தேவையான குருதிசிறுதட்டுக்களின் அளவினை குறைக்கும்.

இதை இவ்வாறு யோசித்துக்கொள்ளுங்கள்.ஈரானில் இருந்து நேரடியாகவே குழாய்கள் மூலம் சீனாவின் தொழிற்சாலைகளுக்கு மசகு எண்ணெய் விநியோகம் செய்யும் ஒரு system உள்ளது.இதில் திடீரென isis தீவீரவாதிகள் (abovirus)  புகுந்து குழாய்களில் ஓட்டை போட்டால் அல்லது எண்ணையினை ஆட்டை போட்டால் தொழில்சாலைகளின் இதயமான இயந்திரங்கள் நின்று உற்பத்தி பாதிக்கும்.அதே போன்றே உங்கள் இதயமும்.

இதேபோன்று நமது குருதிகலங்களில் இந்த வைரஸ்கள் ஓட்டை போடுவதால் உள்ளே செல்லும் குருதி வெளியே பாயத்தொடங்கும்.இதனால் குருதி  கலன்களுள் குருதியின் அளவு குறைதலின் காரணமாக நமது உடலின் ஏனைய பகுதிகளுக்கு குருதி செல்வது தடைப்பட்டு அந்த உறுப்புக்கள் செயல் இழக்க தொடங்கும் .இதனையே டெங்குவின் தீவிரநிலை அல்லது dengue shock syndrome என்போம்.

டெங்குவினால் இறந்த நோயாளிகளின் சரிதையை நோக்கினால் அவர்களின் அலட்சியமே காரணமாய் இருக்கிறது அல்லது வைத்தியசாலையினை பிந்தி நாடுதல்.(late admission).எமது திருமலை வைத்தியசாலைக்கு உரிய நேரத்தில்  நேரடி அனுமதி பெற்று (direct admission not transferred) யாருமே இறக்கவில்லை.

உங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக full blood count என்ற பரிசோதனையை செய்யுங்கள்.இதில் குருதி சிறுதட்டுக்களின் அளவினை அவதானியுங்கள்.platelet count…. இது PLT என குறிக்கப்பட்டிருக்கும்.இது 150000 இனை விட குறைவாயின் அவதானம் தேவை அல்லது வைத்திய விடுதிகளுக்கு ADMISSION ஆகுங்கள்.

சிலவேளைகளில் முதலாம் நாள் PLATELETS நோர்மல் ஆக இருக்கும்.இரண்டாம் நாளில் இருந்து குறைய தொடங்கும்.எனவே நீங்கள் வீட்டில் இருந்தால் ஒவ்வொருநாளும் FULL BLOOD COUNT செய்யுங்கள்.வார்டில் தினமும் இருதடவைகள் செய்வார்கள்.

டெங்குவின் மூன்றாம் நாளிலேயே ஆபத்து தொடங்குகிறது.அதாவது காய்ச்சல் விட்டு விடும்.உடம்பு குளிரத்தொடங்கும்.உடனேயே பைக் இனை எடுத்து ஊர் சுற்ற தொடங்க வேண்டாம்.ஏனெனில் இப்போதுதான் நீங்கள் SHOCK STAGE இற்கு செல்ல தொடங்குகிறீர்கள்.உடம்பு திடீரென குளிர்தல் உங்கள் உடம்பில் இரத்த ஓட்டம் குறைவதனாலேயே.அதாவது ஒருசீர்த்திடநிலை என்ற விஞ்ஞான அலகில் உடம்பின் வெப்பத்தினை பேணுதலில் குருதியின் பங்கினை அறிந்துள்ளீர்கள்.எங்காவது உடம்பின் ஒரு பகுதியில் குளிர தொடங்கினால் அதன் அர்த்தம் அங்கு குருதியின் அளவு குறைதல் ஆகும்.

இந்த SHOCK நிலையில் உங்கள் குருதியமுக்கம் குறையும், நாடித்துடிப்பு அதிகமாகும், தலை சுற்றும் , வயிற்றுவலி வரும் ,வாந்தி வரும் , சில வேளைகளில் இருமத் தொடங்குவீர்கள்.நீங்கள் விடுதிகளில் இருந்தால் டாக்டர் அல்லது NURSE அவதானித்து DEXTRAN எனும் திரவத்தை வேகமாக அனுப்புவதன் மூலம் நீங்கள் குணப்படுத்தபடுவீர்கள்.இந்த DEXTRAN ஆனது மூலக்கூற்று திணிவு/MOLECULAR WEIGHT அதிகமுடையது.இது விரைவாக குருதியிழப்பை சீர்செய்வதுடன் மேலும் குருதி இழக்காமல் இருக்க உதவி செய்யும்.

இந்த SHOCK நிலையின் ஆபத்து யாதெனில் இதனை கண்டு பிடித்து நான்கு மணி நேரத்தில் குணப்படுத்தாது விடின் உங்கள் உறுப்புக்கள் செயல் இழக்க தொடங்கும்.அதாவது ORGAN FAILIURE.முக்கியமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிறுநீர் கழித்தலில் கடினம் , ஈரல் பாதிக்கப்பட்டு வயிற்றுநோவும் வயிறு வீங்குதலும் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சு விட சிரமம் என்பன நிகழும்.இந்த நிலைக்கு சென்றால் உங்களை கடவுளும் காப்பாற்ற முடியாது.SHOCK நிலையின் இந்த நான்கு மணித்தியாலங்களை மருத்துவத்தில் GOLDEN HOURS என்போம்.உங்கள் முதல் காதலி மாதிரி தவற விட்டால் அவ்வளவுதான்.காதல் கூட இன்னொரு முறை வரும் உயிர் அவ்வாறு அல்ல.வீட்டில் தலை சுற்றுகிறது என படுத்து விட்டு வார்டுக்கு தாமதமாய் வருவோரின் கவனத்துக்கு.

அதிகமாய் நீராகாரம் அருந்தினால் டெங்குவை குணமாக்கலாம் என்பதும் ஒரு மூட நம்பிக்கையே.உங்கள் உடல் நிறைக்கு ஏற்ப மணித்தியாலத்துக்கு இவ்வளவுதான் குடிக்கலாம் என்ற அளவுகோல் இருக்கிறது.அதை தாண்டி உங்கள் உடலுக்குள் திரவங்கள் சென்றால் FLUID OVERLOAD ஆகி மரணமும் நிகழலாம்.முக்கியமாக குழந்தைகளில் இந்த நிலைமை ஏற்படுவதுண்டு.

உண்மையிலேயே டெங்கு ஆபத்தான நோயல்ல நீங்கள் ஓய்வாய் இருந்து நியமிக்கப்பட்ட அளவுகளிலான திரவங்கள் உள்ளேடுக்கப்பட்டால்.இதனை விட உங்கள் PLATELETS குறைந்து செல்கிறதே என்று வருந்தவும் வேண்டாம்.ஏனெனில் PLT வெறும் 3000 இற்கு கீழிறங்கி மீண்டவர்களும் உண்டு.

டெங்குவை சாக்காக வைத்து சும்மா இருந்த தெம்பிலியை 150 ரூபா வரை உயர்த்தியுள்ள வியாபாரிகளே இது உங்களின் கவனத்துக்கு ... உங்களுக்கான கட்டிலும் தயார் நிலையில் இருக்கிறது.

நீங்கள் இறைவனிடம் செய்யும் பிரார்த்தனையில் திடீரென பெய்யும் இந்த மழையினை நிறுத்த சொல்லி கேளுங்கள் .. ஏனெனில் ஒவ்வொரு திடீர் மழையின் பின்பும் எமன் வருகிறான் எருமையில் அல்ல நுளம்பில் .. ஏனெனில் இந்த திடீர் மழை டெங்கு நுளம்புகளின் உற்பத்திக்கு முக்கிய காரணம் .

நாம் எவ்வளவு அறியாமையில் இருக்கிறோம் என்றால் ஒரு நண்பரின் முகநூல் பதிவு இவ்வாறு இருந்தது ......
“இன்று ஊரில் நல்ல மழை.இதோடு இந்த ஊரின் நோய் நொடிகள் அழியட்டும்’

டெங்குவை கட்டுபடுத்த ஒன்றும் இங்கு கடவுள்கள் தேவையில்லை.உங்கள் உள்ளங்கள் போதும்
 
MI. IRSHAD 
Rate this item
(0 votes)

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.