அக்பர் கடற்கரை பிரதேசம் இருக்கை வசதிகள் கொண்டதாக அழகு படுத்தப்படவுள்ளது

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துர் ரஸ்ஸாக் (ஜவாத்) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ,முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களினால் கிழக்கு மாகாண சுற்றுலா துறை அமைச்சின் முப்பது இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் மருதமுனை, ,பெரியநீலாவணை, அக்பர் கடற்கரை பிரதேசத்தில் இருக்கை வசதிகள் கொண்டதாக கடற்கரை பகுதி அழகு படுத்தப்படவுள்ளது

கல்முனை மாநகர சபையின் வழிகாட்டலில் நிர்மாணிக்கப்படவுள்ள இதற்கான அமைவிடத்தை நேற்று சனிக்கிழமை(09 .09 .2017 ) மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணிஎ.எம்.றக்கீப்,எ.ஆர்.அமீர் சகிதம் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துர் ரஸ்ஸாக் ஜவாத் பார்வையிடடார். இதில் ஆசிய பவுன்டேஷன் நிகழ்ச்சித் திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் அவர்களும் பங்கேற்றிருந்தார்.

இதன்போது அக்பர் வீதி முன்றலில் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பது மற்றும் அதில் தேவையான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், ,ஏ.எம். றக்கீப் , ஆணையாளர்,மற்றும் கொந்தரத்துக்காரர் அகியோர்களுடன் கலந்துரையாடிய மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துர் ரஸ்ஸாக் ஜவாத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.

இந்நிதியொதுக்கீட்டுக்காக முயற்சிகளை மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துர் ரஸ்ஸாக் (ஜவாத்) ,முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *