20ஆம் திருத்தம்

13 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பறிக்காத வகையில் 20 திருத்தம் முன்வைக்கப்பட்டால் அதனை கிழக்கு மாகாண சபை சாதகமான முறையில் பரிசீலிக்க தயாராக உள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

20 ஆவது திருத்தச் சட்டத்தில் மாகாண சபையினை பாராளுமன்றம் கட்டுப்படுத்தும் வகையிலான சில ஷரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அவை கட்டாயம் திருத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

ஏறாவூர் நகரில் பாதைகள் திறப்பு விழா மற்றும் பாலங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வின் பின்னர் இடம் பெற்ற பொதுக் கூட்டத்திலேயே கிழக்கு முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்,

 

இங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர்,

 

மாகாண சபைகளை கலைக்கும் அதிகாரங்கள் உள்ளிட்ட சில விடயங்கள் 20 ஆம் திருத்ததில் முன்வைக்கப்பட்டுள்ளன,

அவை மாகாண சபையை வலுப்படுத்தும் 13 ஆம் திருத்தத்திற்கு முரணாணவையாகும்,

 

எனவே அவற்றை திருத்தி 20 ஆம் திருத்தம் முன்வைக்கப்படுமாயின் நாட்டின் நலன் கருதி அதனை சாதகமாக பரிசீலிக்க கிழக்கு மாகாண சபை தயாராகவுள்ளது,

 

அத்துடன் கடந்த ஆட்சியாளர்களால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்டு இந்த நல்லாட்சியின் கைகளில் கடன் சுமைகளுடன் வழங்கப்பட்டு இருந்தன,

இதனால் கடந்த இரண்டு வருடக் காலப்பகுதியில் நல்லாட்சியில. பாரிய அபிவிருத்திகள் ஏதும் இடம்பெறாத நிலையில் அண்மையில் 2025 எனும் புதிய பொருளாதார திட்டத்​தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் முன்வைத்தனர்,

இனிமேல் அந்த திட்டத்தின் அடிப்படையில் நாட்டின் வளர்ச்சிக்காக அந்த பொருாளதார திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமையால் அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது,

அத்துடன் அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தேர்தல் காலங்களில் கூறினர்,

அதற்காக மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்ற வேண்டிய தேவை இருக்கின்றது.

 

அத்துடன் சிறுபான்மையினருக்கு விடிவினை ஏற்படுத்தும் வகையிலான அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் முஸ்தீபுகள் உள்ளன,

 

இந்தக் கால கட்டத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டால் குறித்த திட்டங்களுக்கு பாதகம் வரலாம் எனக் கருதி 20ஆம் திருத்தத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளது,

நாட்டு மக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் நன்மையை ஏற்படுத்தும் எந்த விடயத்திற்கும் கிழக்கு மாகாண எப்போதும் ஒத்துழைப்பு வழங்கும்,

ஆகவே மாகாண சபையின’ அதிகாரங்களை பறிக்கும் வகையிலான ஷரத்துக்களை திருத்தத்தை ஏற்படுத்தி அரசாங்கம் மாகாண சபைக்கு வழங்கினால் எதிர்வரும் திங்கட்கிழமை எமது மாகாண சபை கூடவுள்ளது இதன் போது நாம் அதனை சாதகமாக பரிசீலிப்போம் எனக் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்

இதன் போது 30 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புன்னக்குடா வீதி திறந்து வைக்கப்பட்டதுடன் 7 மில்லியன் ரூபா செலவில் பாலங்களுக்கான அடிக்கல் கிழக்கு மாகாண முதலமைச்சரால் நட்டுவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *