வைத்தியசாலைக்கு அடிக்கல் நடும் நிகழ்வு

இலங்கையில் முதன் முதலாக தாபிக்கப்பட்ட நிந்தவூர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு 350 மில்லியன் நிதியில் சகல வசதிகளையும் கொண்டு நிர்மானிக்கப்படவுள்ள வைத்தியசாலைக்கு அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று மாலை (03) பிரதி அமைச்சர் பைஷல் காசீம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்தினா கலந்துகொண்டு அதற்கான அடிக்கல்லினையும், நிந்தவூர் பிரதேச ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லினையும் இதன்போது நாட்டி வைத்தார்.

ஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் உத்தியோக பூர்வwww.arhncdsrilanka.lk என்ற இணையத்தளத்தினை குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பரினால் சுகாதார அமைச்சருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட பின்னர் அதனை ஆரம்பித்து வைத்தார்.

சுகாதார பிரதி அமைச்சர் பைஷல் காசீம் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜிதவுக்கு பொன்னாடை போர்த்தி ஞாபகச் சின்னத்தையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுடீன், ஐ.எல். மாஹீர், ஏ.எல். தவம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் சுகாதார பிரதி அமைச்சரின் இணைப்பாருமான ஆப்தீன் தமீம் உள்ளிட்டவர்களுடன் மு.காவின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பெரும் திரளான போராளிகளும் கலந்துகொண்டனர்.

FAIZAL ISMAIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *