மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில்’ஒன்றுமையே பலம்’ என்ற தொனிப் பொருளில்; பழைய மாணவர்கள் ஒன்றிணைவு

நூற்றாண்டு கடந்த மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில்’ஒன்றுமையே பலம்’என்ற தொனிப் பொருளில்; பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டமொன்று 2017.08.15ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அல்-மனார் மத்திய கல்லூரியல் கற்று வெளியாகிய பல் துறைசார்ந்த மாணவர்களை ஒன்றிணைத்து பாடசாலையின் பௌதீக வளத்தையும்,கல்வி மேம்பாட்டையும் முன்னெடுப்பதே இந்த செயற் திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கா இக்கல்லூரியின் பழைய மானவரும்,முன்னாள் அதிபரும்,ஒய்வு பெற்ற கல்விப் பணிப்பாளருமான எம்.எச்.காதர் இப்றாகீம் தலைமையில் பழைய மாணவர்; அப்துல் கபூர் கலீலுர் றஹ்மானின் முகாமைத்துவத்தில் தற்போதய அதிபர் எம்.ஏ.எம்.இனாமுல்லாவின் நெறிப்படுத்தலில் பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு என்பன ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர்.
இவர்களின் ஒத்துழைப்போடு இந்தப் பாடசாலையில் கல்வி கற்று வெளியாகிய பல துறைசார்ந்த பலர் இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்க ஒன்றிணைந்துள்ளனர். ‘ஒன்றுமையே பலம்’ என்ற தொனிப் பொருளில் ஒன்றிணைந்த பழைய மாணவர் சமூகம் இந்தப் பாடசாலைக்காக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்த வருகின்றார்கள்.
சிரமதானம்.விளையாட்டு மைதானம் புனரமைப்பு,கட்டட நிர்மாணம்,விளையாட்டு மைதானத்திற்கு மண்போட்டு நிரப்புதல்,டீசேட் அறிமுகம் என்பன நடந்து முடிந்துள்ளன.பாடசாலையின் மனாரியன்ஸ் ஈகிள் அமைப்பினால் 1200 டீசேட்டுக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.அதே போன்று 1200 தொப்பிகளை விழா ஏற்பாட்டுக் குழுவினர் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இந்த வேலைத் திட்டத்தை முன்னிட்டு பாடசாலை மைதானப் புனரமைப்புக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பத்து இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார் மேலும் ஐந்து இலட்சம் ரூபாவை ஒதுக்கித் தருவதாக உறுதியளித்துள்ளார்.மேலும் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக பாடசாலையின் கட்ட திருத்த வேலைகளுக்காக இப்பாடசாலையின் பழைய மாணவரும் அம்பாறை மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளருமான எஸ்.அன்வர்தீன் மூன்று இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.இன்னும் பலர் பல தேவைகளுக்கு ஏற்ப நிதிகளையும் உதவிகளையும் வழங்கியுள்ளனர்.
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்களை விழிப்பூட்டும் வகையில் 2017.08;.05ஆம்; திகதி காலை 7.00 மணிக்கு பாடசாலை வளாகத்தில் இருந்து பதாதைகளுடன் நடை பவணி ஆரம்பமாகும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நடைபவணியை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.நடைபவணி பிரதான வீதி ஊடாக கல்முனை நகரைச் சுற்றி மீண்டும் மருதமுனை உள்ளுர் வீதிகள் ஊடாக பாடசாலையை வந்தடையும் இந்த நடைபவணியில் 1500 பழைய மாணவர்கள் பங்கு கொள்ளவுள்ளனர்.
கிரிக்கட் சுற்றுப் போட்டி விழா ஒன்று 2017-09-08ஆம் திகதி தொடக்கம் 2017-09-10ஆம் திகதி வரை புனரமைக்கப்பட்ட பாடசாலை மைதானத்திலேயே நடைபெறவுள்ளது.இந்தச் சுற்றுப் போட்டியில் 1980ஆம் ஆண்டு தொடக்கம் 2003ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கா.பொ.த.சாதரண தரத்தில் கற்ற மாணவர்களைக் கொண்ட 28 அணிகள் பங்குபற்றுகின்றன அணிக்கு 11பேரைக் கொண்ட 5 ஓவர் மென்பந்து சுற்றுப் போட்டியாகும்.இறுதிப் போட்டியும் பரிசளிப்பும் 2017-09-10ஆம் திகதி நடைபெறும்.
இப்பெருவிழாவின் இறுதி நிகழ்வாக 15ஆம் திகதி கலை கலாச்சார நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.அல்-மனார் மத்திய கல்லுரியில் கற்ற வெளியூர் மாணர்களையும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்பான அழைப்பு விடுக்;கின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *