இன நல்லிணக்கத்துக்காக போராடிய மூத்த தலைவரை இழந்து விட்டோம்

இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், நாட்டின் தேசிய பிரச்சினைகளின் போது முதலில் குரல் கொடுக்கும் அல் ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களின் மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைவதாக தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அவரது இழப்பு முஸ்லிம் சமூகத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள விசேட இரங்கல் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-
இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு உயர் மட்ட பதவிகளை வகித்து நாட்டுக்கும், சமூகத்துக்கும் அரும்பெரும் சேவையாற்றிய மூத்த தலைவர் மர்ஹ{ம் ஏ.எச்.எம்.அஸ்வரின் இழப்பானது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அஸ்வர் ஹாஜியார் முஸ்லிம் சமய கலாசார இராஜாங்க அமைச்சராக இருந்த போது 1989 – 1994ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் கலாசார அமைச்சு மற்றும் வக்பு திணைக்களம் என்பவற்றை மிக பலமுள்ள நிறுவனங்களாக மாற்றுவதில் அவரது பங்களிப்பு என்றுமே மறக்க முடியாது.
அஸ்வர் ஹாஜியாருடைய நீண்ட கால அரசியல் வரலாற்றில் பல்வேறுபட்ட சாதனைகளை புரிந்துள்ளார். இறுதி வரையும் தன்னுடைய அரசியலில் தன்னுடைய நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கொள்ளாது முஸ்லிம் சமூகத்தினுடைய நன்மைகள் எல்லா கோணங்களிலும் எல்லா திசைகளிலும் பாதுகாக்கப்பட வேண்டும்இஅவ்வாறு முஸ்லிம்களுடைய பாதுகாப்பு பல திசைகளிலும் இருந்து பாதுகாக்கப்படுவதற்காக பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கும் மத்தியில் அவர் தன்னுடைய அரசியல் பயணத்தை மேற்கொண்டார். இன்று அல்லாஹுத் தஆலா அவருடைய பயணத்தை அங்கீகரித்து அவருடைய பாவங்களை மன்னித்து அவருடைய கப்ரை சுவர்க்கப்பூஞ்சோலையாக்க வேண்டும். அவருடைய மறுமை வாழ்வுக்காக நாம் அனைவரும் பிராத்திப்போமாக- என அதில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *