“அஸ்வர் பற்றி பரவிய தகவல்கள் உண்மையில்லை “

முன்னாள் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் கடும் நோய்வாய்ப்பட்டு கடந்த 25 வெள்ளிக்கிழமை முதல் நவலோக்க தனியார் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை கண்காணிப்புப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இன்று (29) மாலை அவரைப் பற்றி பரவிய தகவல்கள் உண்மையில்லை என்றும் ஆனால், அவருடைய நிலைமை மிகவும் கடுமையாக இருப்பதாகவும் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அஸ்வர் பற்றி வெளியான செய்தி பற்றி குடும்ப உறுப்பினர் ஒருவரோடு தொடர்பு கொண்ட வேளையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எம்.எஸ்.எம்.ஸாகிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *