இலஞ்சக் குற்றச்சாட்டினை விசாரிக்குமாறு காத்தான்குடி சம்மோளத்திற்கு வோண்டுகோள்

காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டிடத் திறப்பு விழா தொடர்பாக கடந்த 18.08.2017-வெள்ளிக்கிழமை கௌரவ இராஜாங்க அமைச்சர் M.L.A.M. ஹிஸ்புல்லா அவர்கள் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் ஒரு தொகைப் பணத்தினை இலஞ்சமாக பெற்றிருப்பதாக மிகப்பெரும் அபாண்டத்தை ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 23.08.2017-புதன்கிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்கள் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கௌரவ இராஜாங்க அமைச்சர் M.L.A.M. ஹிஸ்புல்லா அவர்கள் என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டினை சரியான ஆதாரத்துடன் நிரூபித்தால் தான் அரசியலிளிருந்து வெளியேறுவதாக தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், தன்மீது சுமத்தபட்ட குற்றச்சாட்டினை காத்தான்குடியில் பிரதேசத்தில் நடுநிலைமை வகிக்கும் தாய் நிறுவனமான காத்தான்குடி சம்மேளனத்திற்கு கௌரவ இராஜாங்க அமைச்சர் M.L.A.M. ஹிஸ்புல்லா அவர்களையும், தன்னையும் அழைத்து அதனை தீரவிசாரித்து உண்மைத் தன்மையினை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்று காத்தான்குடி
சம்மேளனத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் எழுத்து மூலமான வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.
காத்தான்குடி சம்மேளனத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் கையொப்பமிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…

இலஞ்சக் குற்றச் சாட்டினை விசாரிக்கக் கோரல்

காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டிட திறப்பு விழா தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை (18.08.2017) கௌரவ இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லா அவர்கள் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் என்மீது அபாண்டமான பொய்யான குற்றச்சாட்டினை சுமத்தியுள்ளார். அதாவது நான் ஒரு தொகைப் பணத்தினை இலஞ்சமாக பெற்றிருப்பதாக மிகப்பெரும் அபாண்டத்தை ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

காத்தான்குடி சம்மேளனம் ஆகிய நீங்கள் காத்தான்குடியில் நடுநிலமையாக செயற்படும் ஒரு நிறுவனமாகும். அதனடிப்படையில் என்மீது குற்றம் சாற்றப்பட்டுள்ள மேற்படி விடயம் தொடர்பாக கௌரவ இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லா அவர்களையும் என்னையும் அழைத்து அதனை தீர விசாரித்து உண்மைத் தன்மையினை பொதுமக்களுக்கு தெரிவிக்கவேண்டும். அத்துடன் கௌரவ இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லா அவர்கள் என்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டினை சரியான ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும், அவ்வாறு அவர் நிருபிக்க தவறும்பட்சத்தில் என்மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டினை வாபஸ்பெற வேண்டும்.

எனவே நடுநிலைமை வகிக்கும் சம்மேளனமாகிய தாங்கள் இந்த விடயத்தில் மேலான கவனம் எடுத்து இதற்கான சிறந்த தீர்வினை பெற்றுத் தருமாறு வேண்டிக்கொள்கிறேன்.
என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் பிரதிகள் ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி மற்றும் பிராதன ஜூம்ஆ பள்ளிவாயல்கள், முக்கிய நிறுவனங்கள் என்பனவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *