சமூக ஊடக வழிகாட்டல் பயிற்சி முகாம்

சமூக ஊடகங்களில் ஆர்வம் உள்ளவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கிலும் வினைத்திறனான பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் முழு நாள் பயிற்சி முகாம் ஒன்றை எதிர்வரும் செப்டம்பர் மாதம்30 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடாத்த திட்டமிட்டுள்ளது.

 

தாக்கம் செலுத்தக் கூடிய வகையில் சமூக ஊடகத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்ற தலைப்பிலான வழிகாட்டல்களும் பயிற்சிகளும் இந்த பயிற்சி முகாமில் வழங்கப்படவுள்ளது.

சமூக ஊடக கையாள்கையில் முன்னணி வகிக்கின்ற தமிழ், சிங்கள, ஆங்கில மொழி மூல வளவாளர்களால் இந்தப் பயிற்சி நெறி முழுநாள் நிகழ்வாக நடத்தப்படும்.

 

சமூக ஊடகங்களைத் தற்போது ஆக்கபூர்வமான முறையில் கையாளுகின்ற எவரும் இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக விண்ணப்பிக்கலாம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அங்கத்தவர்களான ஊடகவியலாளர்களுக்குமுன்னுரிமை அளிக்கப்படும்.

 

பங்குபற்ற விரும்புபவர்கள் தமது பெயர்,முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைmuslimmediaforum@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது 0772355980 / 0777358658 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கோ செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கலாம்.

 

பயிற்சி முடிவில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *