சாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ கேட்கிறோம்……

சாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேசசபையோ கேட்கிறோம் என்று ஒரு விளக்கம்இல்லாமல் புலம்புவதில் எந்த விதப்பிரயோசனமும் இல்லை .

 

தற்போது மாநகர சபை என்றபெரும் அந்தஸ்த்தில் அடங்கி உள்ளசாய்ந்தமருது தனியாகப் பிரிக்கப் படுமானால்அதன் விளைவாக   எதிர் கால பின்விளைவுகள் என்ன என்பது பற்றிய எதிர் காலதூர நோக்குள்ள ஆரோக்கியமான சிந்தனை அல்ல என்றே கூற வேண்டும்

 

நான் இங்கு கூறிக் கொள்வது மனிதர்களின்சிந்தனை-மனம்-சுற்றம் எனும் கூறுகளைஅடிப்படையாகக் கொண்டு அமைவது. எல்லாமனிதர்களுக்குமே உணர்ச்சி என்பதுஇயல்பான ஒன்றாக இருக்கிறது. அப்படிஇருக்க ஓர் எதிர்வினைக்கு அல்லதுவெளிப்பாட்டுக்கு சிந்தனை முக்கியமாஅல்லது உணர்ச்சி முக்கியமா என ஓர்உடனடி தீர்வு காண முடியுமா?” என்பதே

 

தற்போது மாநகர சபை அந்தஸ்தில் உள்ளசாய்ந்தமருத்துக்கு என்ன வகையானபிரச்சினைகள்  என முதலில்  அலசப்படவேண்டும் ,அலசப் பட்டு அவைகளைதீர்ப்பதுக்கான நடவடிக்கை எடுக்கவேண்டுமே அன்றி குறு கிய சிந்தனையோடுபிரித்தெடுப்பது புத்திசாலித் தனமன்று.தமிழர்கள் ,முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழவழி தேட வேண்டுமே அன்றி பிரித்தாழவேண்டும் என்ற கோஷம் அடியோடு அகற்றப்படவேண்டும்

 

சாய்ந்தமருதை பிரித்தெடுப்பதன் மூலம்கல்முனைக்குடி, மருதமுனை போன்றமுஸ்லிம்கள் வாழும் பிரதேசம் வலு இழந்துஅனாதைகளாகப்படும் அத்துடன் கல்முனைஎன்று புகழ் பெற்ற நகரம் முஸ்லிம்களின்கையை விட்டும் சோரம் போகும்.

 

சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபைவழங்கப்பட வேண்டு மென்பதில் உங்களைவிட கல்முனைத் தமிழர்கள் வேகமாகஇருக்கிறார்கள், சாய்ந்தமருதுக்கு தனியானபிரதேச சபை வழங்கப்பட்டால் அதனைகாரணங்காட்டி கடற்கரைப் பள்ளி றோட்டுக்குமேலுள்ள கல்முனை நகரம் உள்ளிட்டபிரதேசங்கனை உள்ளடக்கி அவர்களுக்குதனியான பிரதேச சபை, பிரதேச செயலகம்மட்டுமல்ல கல்முனை எனும் பெயரும் கூடஅவர்களுக்கு மட்டும்தான சொந்தம் என்றும்கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்

 

சாய்ந்தமருதும் பிரிக்கப்பட்டால் கல்முனைமுஸ்லிம்களின் முழுப் பொருளாதாரமும்உள்ளடங்கிய கல்முனை செயலகம் மற்றும்பிரதேச சபையை அவர்களின் கைகளுக்குள்கொண்டு வந்து விடலாம் எனதமிழர்கள் நம்புகிறார்கள்

 

ஆகவே பேசித் தீர்மானிக்க வேண்டியவிடயத்தை பேசாமல் தீர்மானிப்பது தவறு,அது குழப்ப சூழ்நிலையை ஏற்படுத்தலாம்என்பதை நாம் உணர வேண்டும்.

 

சித்தம் கலங்கியவனின் அறிவு சிந்திக்கமறுக்கும்। சித்தம் தெளிந்தவனின் அறிவுசிந்தித்துக் கொண்டே இருக்கும். ஆகவே நீங்கள் இன்னும் ஆழமாக சிந்தித்துஅருமையான நல்ல முடிவை எடுக்கவேண்டும் என்பதே எனது அவா

 

எனவே பிரச்சினைக்கு தீர்வு காண சாய்ந்தமருதைப்  பிரிப்பதல்ல விடை , அதை எப்படிதீர்த்து வைக்க முடியும் என்று சிந்தித்துமுடிவு எடுக்க வேண்டும் என்பதே எனதுகருத்து. மேலும் சாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ தேவை இல்லை.சாய்ந்தமருது , கல்முனை மாநகரசபையை விட்டுப் பிரியாது என தேசியஜனநாயக மனித உரிமைகள் கட்சிஇஸ்தாபகர்  மொஹிடீன் பாவா தனதுகருத்தை வெளியிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *