மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி மைதானம் விஸ்தரிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி மைதான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நேற்று வெள்ளிக்கிழமை (18) நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம். றகீப், ஏ.எல்.எம். முஸ்தபா, எம்.எஸ். உமர் அலி, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள், விளையாட்டு ஆர்வலர்கள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
இம்மைதானத்தை விஸ்தரிப்புச் செய்யும் வகையில் மேலும் 40 இலட்சம் ரூபா நிதியினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் நகர திட்டமிடல் அமைச்சின் மூலம் ஒதுக்கீடு செய்து தருவதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் இதன்போது குறிப்பிட்டார்.
(அகமட் எஸ். முகைடீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *