சாய்ந்தமருது பிரதேச வறிய குடும்பங்களுக்கு இரண்டாம் கட்டமாக பிரதி அமைச்சர் ஹரீசினால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு

சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 180 குடும்பங்களுக்கு சுய தொழிலை மேற்கொள்ளும்வகையில் பல்வேறுபட்ட உபகரணங்;கள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீசினால் இன்று (12) சனிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைவான நிதி ஒதுக்கீடு மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீசின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு என்பவற்றின் மூலமான இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவி வழங்கும் இந்நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தலைமையில்; சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் சாய்ந்தமருது திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜஃபர், கணக்காளர் ஏ.எல்.எம். நஜிமுதீன், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஏ. பசீர், ஏ. நிசார்தீன், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சுய தொழிலை மேற்கொள்ளும்வகையில் தையல் இயந்திரம், மீன் வியாபாரத்திற்கான துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மீன் பெட்டி, இடியப்ப உற்பத்தி உபகரணங்கள், விவசாய உற்பத்திக்கான கிருமி நாசினி தெளி கருவி, டிஜிடல் தராசு, கொம்ரசர் இயந்திரம் போன்ற பல்வேறுபட்ட உபகரணங்கள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *