சர்வதேச பல்கலைக்கழக அனுபவங்களை பெற்றுக்கொடுப்பதே எமது பிரதான இலக்காகும்;தென்கிழக்கு பல்கலைக்கழக சுதந்திர அலுவலர்கள் சங்கம் தெரிவிப்பு.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நற்பெயரை என்றும் பேணி பாதுகாப்பதோடு அனைத்து உறுப்பினர்களினதும் நலன்புரி விடயங்கள் எதிர்காலத்தில் திட்டமிட்ட அடிப்படையில் இடம்பெறுவதனை உறுதி செய்து சுதந்திரமாக செயல்பட முன்வருமாறு தென்கிழக்கு பல்கலைக்கழக சுதந்திர அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் ஏ எம் அன்வர் வேண்டகொள் விடுத்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக சுதந்திர அலுவலர்கள் சங்கத்தின் விசேட ஒன்றுகூடல் கடந்த(11-05-2018)வெள்ளிக்கிழமை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவர் அல்ஹாஜ் ஏ எம் அன்வர் தலைமையில் இடம்பெற்றது இங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-கல்விசாரா ஊழியர்களின் இலிகிதர் சேவை தரத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழக உத்தியோகத்தர்களையும் உள்ளடக்கி அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள எமது சுதந்திர உத்தியோகத்தர் சங்கமானது அதன் அங்கத்தினர்கள் அனைவரையும் ஒருமுகப்படுத்தி பரஸ்பரம் அறிமுகம் ஒன்றினை ஏற்படுத்தும் முதல் கட்ட செயல்பாடாகவே இந்த நிகழ்வு இடம்பெறுகிறது.

எதிர்காலத்தில் யாருக்கும் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாமல் குழுக்களாக பிரிந்து யாருக்கும் எதிரியாகவோ ஆதரவாகவோ செயல்படாமல் சுதந்திரமாக கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படும் விதத்தில் இந்த சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகத்தர்கள் அனைவரும் தொழில் ரீதியாக அடையவேண்டிய பல பயிற்சி திட்டங்கள்,ஏனைய சர்வதேச பல்கலைக்கழக அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வெளிநாட்டு பயணங்கள் குறித்து நாம் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆலோசித்து வருகிறோம். விரைவில் நடைமுறைப்படுத்த சந்தர்ப்பங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களினதும் பிரசன்னத்துடன் பகலுணவுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் எதிர்கால நோக்கங்கள் செயல்பாடுகள் குறித்து விரிவான விளக்கத்தினை எம் எச் எம் ஹலீம் வழங்கிவைவைத்ததுடன் உறுப்பினர்களான எம்.ஜி. ரொஷான், ஏ எஸ். ஹாபீ ஆகியோரும் தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர். அத்துடன் பொருளாளர் சி.எம்.ஏ.முனாஸ் அவர்களின் நிதி அறிக்கை மற்றும் செயலாளர் எம்.ஏ.சி.எம். சிராஜின் நன்றியுரையுடனும் நிறைவு பெற்றது.

(பி.எம்.எம்.ஏ.காதர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *