அட்டாளைச்சேனை யின் 3வது ஹிப்லு பட்டமளிப்பு விழா

அட்டாளைச்சேனையின் 3வது ஹிப்லு பட்டமளிப்பு விழாவும் கெளரவிப்பும் இன்று 2018.04.29 மிகவும் சிறப்பாகவும் மிகு விமர்சியாகவும் நடைபெற்றது அப் பள்ளியின் அருகாமையில்.

இவ் நிகழ்வுக்கு தலைமை தாங்கியாக

அஷ்ஷேஹ்; அல் ஹாபில் மெளலவி MM.உபைத்துல்லாஹ் (பாகவி,தீனி,முப்தி விரிவுரையாளர்,தப்லீகுல் இஸ்லாம் அரபு கல்லூரி -சம்மாந்துறை)

சிறப்புரை நிகழ்த்துவோர்களாக..

#.அல்-ஹாஜ் மெலளவி ALM.அஸ்ரப் (சர்க்கி),(அதிபர் கிழக்கிலங்கை அரபு கல்லூரி).

#.அல்-ஹாஜ் மெலளவி MM.கலாமுல்லா (ரசாதி) (அதிபர், அபூபக்கர் சித்தீக் அரபு கல்லூரி)

 

பிரதம அதிதியாக கெளரவ அல்-ஹாஜ்

ALM.நசீர் பாரளமன்ற உறுப்பினர் முன்னால் மாகண சுகாதார அமைச்சர்

விஷேட அதிதிகளாக

MI.அமானுல்லாஹ் தவிசாளர் பிரதேச சபை அட்டாளைச்சேனை தமீம் ஆப்தீன் பி.ச.உ-பிரதேச சபை அட்டாளைச்சேனை ஆகியோர்களும் இவ் விழாவில் கலந்து கொண்டு.

மேலும் பல கெளரவ அதிதிகள்,சிறப்பு அதிதிகள்,மஸ்ஜிதுல் பலாஹ் ஹிப்லு குர்ஆன் கல்லூரியின் உலமாக்கள், மஸ்ஜிதுல் பலாஹ் முன்னால் தலைவர்கள்,செயலாலர்கள், மஹ்ல்லாஹ் வாசிகள் கலந்து சிறப்பித்தனர்,அதையே வேளை அப் பள்ளியின் பழைய நிருவாகிகளும் அதையே மேடையில் கெளரவிக்கப்பட்டனர்.

இதில் பட்டம் பெறும் ஹாபில்கள்.

1.அல்-ஹாபிழ்; ஜயுப் மஸ்னி அஹமட்.

2.அல்-ஹாபிழ்;இஸ்மாயில் அத்திப் அஹமட்.

3.அல்-ஹாபிழ்; றினோஸ் ரொக்சான்.

4.அல்-ஹாபிழ்; பதிர்தீன் அஹமட் அப்துல் நாசிர்.

அல்ஹம்துலில்லாஹ் தங்கள் நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அப் பள்ளியின் ஏற்பாட்டு குழு மஸ்ஜிதுல் பலாஹ் பரிபாலனசபை நன்றியே தெரிவித்ததோடு இப் பள்ளியில் 15ன்கு வருடங்களாக மிகவும் சிறப்பான முறையில் ஹிப்லு ஓதல் முறை நடைபெற்று வருகிறது.

ஒவ்வெரு வருடமும் பட்டம் பெறும் ஹாபிழ்கள் கெளரவிக்கப்படுகின்றனர் அதையே போன்று இவ் வருடம் மேலும் சிறப்பாக செய்து மிகவும் வெற்றிகரமாக நடாத்தி முடிந்தையோட்டி மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது என்று தெரிவித்தனர் ஏற்பாட்டு குழுவினர்கள்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *