கல்முனை றோயல் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிய நிகழ்வு.

கல்முனை பிரதேச செயலக கலாச்சார அதிகார சபையின் வேண்டுகோளின் பேரில் அகில இலங்கை சோனகர் சங்கத்தின் மருதமுனை கிளையினால் கல்முனை றோயல் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிய நிககழ்வு அண்மையில் அகில இலங்கை சோனகர் சங்கத்தின் மருதமுனை கிளையின் தலைவர் ஏ.அப்துல் கையூம் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.




இதில் பிரதம அதிதியாக் கலந்து கொண்ட கல்முனை மாநகர சபையின் சுயேட்;சைக் குழு உறுப்பினர் எம்.எஸ்.முகம்மட் நவாஸ்,ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சினாஸ்,பி.கமல் ஆகியோர் பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனியிடம் புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்களை கையளிப்பதையும்,கல்முனை பிரதேச செயலக கலாச்சார அதிகார சபையின் உப தலைவர் கவிஞர் சோலைக்கிளி,செயலாளர் எஸ்.எல்ஏ.அஸீஸ் மற்றும் ஏனைய அதிதிகளையும் காணலாம்.

(பி.எம்.எம்.ஏ.காதர்)








Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *