முகத்தில் அறைந்த மத்திய கிழக்கு தூதுவர்களும், அதிர்ந்துபோன முஸ்லிம் கூட்டமைப்பினர்களும்.

முஸ்லிம் கூட்டமைப்பு என்ற போர்வையில் முஸ்லிம் காங்கிரசை அழித்து பாரியளவில் பணமும் சம்பாதிக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக டெய்லி மிரர் ஆங்கில நாளிதழில் கடந்த இரண்டாம் திகதி செய்தி வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளது.

முஸ்லீம் காங்கிரஸ் மூலமாக கடந்த காலங்களில் அதி உச்ச அதிகாரங்களையும், பதவிகளையும் அனுபவித்து பழக்கப்பட்ட சிலர், தொடர்ந்து தங்களுக்கு அவ்வாறான பதவியையும், அதிகாரத்தினையும் வழங்காததனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மீது ஆத்திரம் அடைந்துள்ளார்கள்.

அதனால் “குடிப்பது அல்லது கவிழ்ப்பது” என்ற தத்துவத்துக்கு அமைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற போர்வையில் கூட்டணி என்றும், தூய காங்கிரஸ் என்று ஓடித்திரிவதனை நாங்கள் காண்கின்றோம்.

இவ்வாறான அரசியல் செயல்பாடுகளுக்கு பெருமளவான பணம் தேவைப்படும். அதாவது முஸ்லிம் காங்கிரசில் உள்ள பிரமுகர்களை விலை கொடுத்து வாங்குதல் உற்பட இதர செயல்பாடுகளுக்கும் மற்றும் தங்களது சம்பாத்தியத்துக்கும் ஆகும்.

இப்படியான அரசியல் செயல்பாடுகளுக்காக எந்தவொரு அரசியல்வாதிகளும் தங்களது சொந்த பணத்தினை செலவு செய்வ முன்வருவதில்லை. எனவேதான் பணம் வசூலிக்கும் நோக்கில் முஸ்லிம் கூட்டமைப்பினர் ஆரம்பத்தில் பல கொழும்பு வர்த்தக பண முதலைகளை அணுகியுள்ளார்கள். அதற்கு அவர்களிடமிருந்து சாதகமான சமிக்ஜை கிடைக்கவில்லை.

அதனால் மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களை அணுகியுள்ளார்கள். இவர்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதுடன், அதனை பரிசீலிப்பதாக இந்த முஸ்லிம் கூட்டனிக் காரர்களுக்கு தூதுவர்களினால் ஆறுதல் வார்த்தைகள் கூறப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டார்கள்.

பின்பு இந்த விவகாரத்தினை முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கு மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் எத்திவைத்துள்ளதுடன், அவரிடம் ஆலோசனையும் கேட்டுள்ளனர். ஒற்றுமையை பேணவேண்டிய முஸ்லிம் சமூகத்தில் கூட்டமைப்பானது பிளவுகளை உண்டு பண்ணும் என்று அந்த தூதுவர்களிடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறியதாகவும் அறியக்கிடைக்கின்றது.

பின்பு அந்த கூட்டமைப்பு காரர்கள் பெரிய எதிர்பார்ப்புக்களுடன் மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களை சந்தித்துள்ளார்கள். அப்போது அவர்களுக்கு பாரிய ஏமாற்றமும், தலைகுனிவும் காத்திருந்தது. அதாவது, “பதவியினை மய்யமாக வைத்து பிரிந்துவிடாதீர்கள் ஒரே சக்தியாக இந்த நாட்டு முஸ்லிம் மக்களின் உரிமைக்காக ஒற்றுமையாக போராடுங்கள்” என்று முகத்தில் அறைந்தவாறு அந்த தூதுவர்களினால் புத்திமதி கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரசை அழிப்பதுடன், கூட்டமைப்பு என்ற போர்வையில் பெருமளவில் பணம் சம்பாதிக்க இருந்த சந்தர்ப்பமும் கைநழுவி விட்டது என்ற காரணத்தினால் விரக்தி நிலையை அடைந்துள்ளதுடன், இப்பொழுது வேறு வழிவகைகளை தேடிக் கொண்டிருக்கிறார்களாம். சில நேரங்களில் இந்திய ரோவை நாடலாம் என்று ஒரு சந்தேகமும் எழும்புகின்றது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

467 thoughts on “முகத்தில் அறைந்த மத்திய கிழக்கு தூதுவர்களும், அதிர்ந்துபோன முஸ்லிம் கூட்டமைப்பினர்களும்.

Leave a Reply

Your email address will not be published.