திருகோன மலை ஹபாயா விவகாரம் சம்பந்தமாக கல்வி அமைச்சருடன் சந்திப்பு..!

திருகோணமலை சன்முக வித்தியால முஸ்லிம் பெண் ஆசிரியர்கள் தமது மத வறையறைக்குட்பட்ட ஆடையான ஹபாயா அணிவதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு உயர்மட்ட குழு ஒன்றை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைத்து அக்குழுவினரை குறித்த விடயம் தொடர்பான அறிக்கையினை ஓரிரு தினங்களுக்குள் சமர்பிக்குமாறு பணித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் குறித்த பாடசாலையில் மத வரையறைக்குட்பட்ட ஆடைகளை முஸ்லிம் ஆசிரியர்கள் அணிவதில் இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமை இன்று (27) வெள்ளிக்கிழமை சந்தித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்ததைத் தொடர்ந்து மேற்படி பணிப்புரையினை கல்வி அமைச்சர் விடுத்துள்ளார்.


திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் உறவு நீண்ட காலமாக நல்ல விதமாக நீடித்துவரும் நிலையில் இச்சம்பவத்தினால் சில மனக்கசப்புகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்த பிரதி அமைச்சர் ஹரீஸ் இந்நிலை நாட்டின் சூழலுக்கு உகந்தவிடயமல்ல என்பதையும் கல்வி அமைச்சருக்கு சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் பெண் ஆசிரியர்கள் தமது முகத்தை வெளிக்காட்டிய நிலையில் ஹபாய ஆடை அணிவதற்கு பிரச்சினை இல்லை என்று தெரிவித்த கல்வி அமைச்சர் இது தொடர்பிர் ஓரு வாரத்திற்குள்  உத்தியோகபூர்வ அறிவிப்பு ஒன்றை அதிகாரிகளுக்கு வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
(அகமட் எஸ். முகைடீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *