மரணித்தும் மக்கள் மனங்களில் வாழும் மாமனிதர் மர்ஹூம் எச்.எல்.ஜமால்தீன் S.S.P

2009.04.05 ஆம் திகதி அகால மரணமடைந்த மருதமுனையைச் மர்ஹ{ம் எச்.எல். ஜமால்தீன் ளுளுP அவர்களின் ஒன்பதாவது ஆண்டு (2018.04.05) நிறைவையொட்டி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

மருதமுனை மண்ணின் வரலாற்றில் என்றும் போற்றப்படுபவர் டாக்டர் எச்.எல்.ஜமால்தீன் எஸ்.எஸ்.பி 2009.04.05ஆம்; திகதி ஞாயிற்றுக்கிழமை மாலைக் கருக்கலில் மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு அகால மரணமடைந்தார்.

மக்கள் சேவையையும், சமயத் தொண்டையும் தனது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் எச்.எல்.ஜமால்தீன். அன்பு, பண்பு, பாசம் இவைகளினூடே புன்சிரிப்பு, மென்மையான வார்த்தை இவை அனைத்தும் மக்களைக் கவர்ந்தவை, சிறந்த ஆளுமைப் பண்பைக் கொண்ட ஒரு தலைவனாக தமிழ்,முஸ்லிம,சிங்கள் மக்கள் இவரை வரவேற்றனர்.

மருதமுனையைச் சேர்ந்த ஹாமீதுலெவ்வை,சீனத்தும்மா தம்பதியின் புதல்வாரன எச்.எல். ஜமால்தீன் தனது ஆரம்பக்கல்வியை மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்திலும,;மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியிலும்; கற்றார். க.பொ.த.சாதாரண தரம் படிப்பதற்காக 1972ஆம்; ஆண்டு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் இணைந்து திறமையாக தேறினார்.

1975ம் ஆண்டு உவெஸ்லி உயர்தரப் பாடசாலையிலிருந்து யாழ் இளவாலை ஹென்றி கல்லூரியின் பாதர் பிரான்சிஸ் அவர்களால் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு உயர்தரம் கற்றார்.அங்கு 19 வயதிற்குட்பட்ட அகில இலங்கை ரீதியான உதைப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றி அவரது சிறந்த விளையாட்டின் மூலம் தனது அணியை வெற்றிபெறச் செய்தார்.


இவரின் சிறந்த ஆட்டத்திற்காக கல்வி அமைச்சு “சிறந்த வீரருக்கான தங்கப்பதக்கம்” அணிவித்து இவரை கௌரவித்தது. உதைபந்தாட்டம் மூலம் மருதமுனைக்கு முதன் முதலில் தங்கப் பதக்கம் பெற்று வந்த பெருமை ஜமால்தீனையே சாரும். பாடசாலைக் காலத்தில் ஒரு சிறந்த விளையாட்டு வீரனாகவும், தலைமைத்துவம் கொண்ட, ஆளுமைத்தன்மை கொண்ட ஒரு மாணவராகவும் இவர் திகழ்ந்தார்.

1994ம் ஆண்டு தொடக்கம் மரணிக்கும் வரை (ஒரு ஆண்டு அடங்காது) அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராகவும், அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தின் உறுப்பினராகவும் பணி செய்தார். 2004ம் ஆண்டு மலேசியாவுக்கான விளையாட்டுப் புலமைப் பரிசில் பெற்றுச் சென்றார். மேலும் மசூர் மௌலானா விளையாட்டு மைதான அபிவிருத்தியிலும் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டதுடன் மைதானத்தில் புதிய கட்டிட நிர்மாணிப்புக்கு முழு மூச்சாக செயற்பட்டார்.

வறியவர், செல்வந்தர் என்று பாராது தனது சேவையை சமூகத்துக்கும், தேசத்துக்கும் ஆற்றவேண்டும் என்பதற்காக 1980.04.16ஆம் திகதி இலங்கை பொலிஸ் சேவையில் உதவிப் பொலிஸ் பரிசோதகராக இணைந்து கொண்டார். களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வெளியேறி நாட்டின் பல இடங்களில் பணிசெய்தார். பின்னர் உயர் நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின்படி இவரின் தகைமைகளின் அடிப்படையில் 1980.12.24ஆம்; திகதி முதல் பொலிஸ் பரிசோதகராக (ஐP) நியமனம் பெற்றார்.

மேலும் இத்தீர்ப்பின்படி 2001-05-31ஆம் திகதி தொடக்கம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராகவும் (யுளுP) பதவி உயர்வு பெற்றார். தோற்றுப் போகாத இவரது அறிவும், துணிவும் பொலிஸ் அத்தியட்சகர் (ளுP) வரை உயர்த்தியது இப்பதவியில் இருந்து கொண்டு மரணிக்கும் வரை சமூகத்துக்குப் பணி செய்தார். பொலிஸ் சேவையில் இருக்கும் போது பல புலமைப்பரிசில்களைப்பெற்று வெளிநாடு சென்றார்.

2007.06.07ஆம்; திகதி தொடக்கம் பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்ற ஜமால்தீன் 2007.11.10ஆம்; திகதி தொடக்கம் கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பிரதிப் பணிப்பாளராக மரணிக்கும் வரை கடமை புரிந்தார். மருதமுனையில் 1வது பொலிஸ் அத்திட்சகர் என்ற பெருமையை தனக்கும் மருதமுனை மண்ணுக்கும் தேடிக்கொடுத்தார்.

சமாதானம், சகவாழ்வு, அன்னியோன்னியம், ஏனைய மதங்களை மதித்தல் என்பனவற்றை தன்னில் கொண்டிருந்தார் சமாதான வாழ்க்கைக்கு இவர் அதிகம் உதவினார். பயங்கரவாத பிரச்சினைகளின் போதும், இன முரண்பாடுகளின் போதும் இனங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்க்க பெரிதும் பாடுபட்டார். குறிப்பாக தமிழ்,முஸ்லிம் மக்களுக்கிடையே அவ்வப்போது ஏட்பட்ட விரிசல்களின் போது ஒரு சமாதானப் புருஷராக தொழிற்பட்டார். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் நன்மதிப்பையும் பாராட்டுதலையும் பெற்றவர் ஜமால்தீன். மூன்று இன மக்களுக்கும் தன்னை அர்ப்பணித்து தொழிற்பட்டார். இதனால் மனித உள்ளங்கள் எங்கும் வாழ்பவராக உள்ளார். இதனால் மரணித்தும் மரணிக்காது மனித உள்ளங்களில் வாழும் மாமனிதர் என மக்கள் போற்றுகின்றனர்.

மருதமுனைக் கிராமத்திற்கு மட்டுமல்ல முழு தென்கிழக்குப் பிரதேசத்திற்குமே கலங்கரை விளக்கமாக பிரகாசித்துக்கொண்டிருந்த மர்ஹ{ம். ஜமால்தீன் இன்றுடன் உயிர்நீத்து ஒன்பது வருடம்(05-04-2018)கடந்தாலும் அவரது உணர்வுகளும், உண்மையான சேவைகளும் மக்கள் மனதில் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இனி அவர் விட்டுச்சென்ற அறப் பணிகளை நல்ல முறையில் தொடர்ந்து முன்கொண்டு செல்வதே அன்னாருக்குச் செய்யும் கைமாறாக அமையும். அன்னாருக்கு ஒளிமயமான கப்றுடைய வாழ்வும், உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கமும் கிடைக்க இருகரம் ஏந்தி இறைவனைப் பிரார்த்திப்போமாக ஆமீன்.

-மருதமுனை பி.எம்.எம்.ஏ. காதர் –

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *