கல்முனை மாநகர சபையின் மேயராக சட்டத்தரணி ஏ.எம். றகீப் தெரிவு.

அம்பாறை மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த  கல்முனை மாகரசபையின் முதல் அமர்வு   (2) திங்கட்கிழமை பி.ப 2.30மணிக்கு  கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில்  நடைபெற்றது.

கல்முனை மாநகர சபையில் தமிழ் – முஸ்லிம் உறுப்பினர்களை கொண்ட 31 ஆசனங்களுக்கிடையே வாக்கெடுப்பு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் மேயர் பதவிக்கு ஏ.எம்.றகீம் சட்டத்தரணி மற்றும் த.தே.கூட்டமைப்பு சார்பில் கென்றி மகேந்திரன் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது.
இருவருக்குமான தெரிவு  வாக்கெடுப்பில் விடப்பட்டபோது ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து தெரிவான ஏ.எம். றகீப் 22 வாக்குகளைப் பெற்று கல்முனை மாநகரசபையின் மேயராக தெரிவு செய்யப்பட்டார்.  அவருடன் போட்டியிட்ட கென்றி மகேந்திரன் 7 வாக்குகளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.  அகில  இலங்கை மக்கள் காங்கிறஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தெரிவான உறுப்பினர்கள், ஹெலிகெப்டர், மான் ஆகிய சின்னங்களில் வெற்றிபெற்றவர்களும் ஏ.எம். றகீப்பை ஆதரித்து வாக்களித்தனர். நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினர் (சேனைக்குடியிருப்பு) ஆகிய இரண்டு பேரும் எவருக்கும் வாக்களிக்காமல் நடுநிலையாக செயற்பட்டனர்.

பிரதி மேயர் பதவிக்கு 3 பேரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டதன. அந்தவகையில் சி.எம் முபீத்(அ. இ. மக்கள் காங்கிரஸ்) கந்தசாமி சிவலிங்கம்(த.தே.கூட்டமைப்பு) , காத்தமுத்து கணேஸ் (தமிழர் விடுதலைக்கூட்டனி )ஆகிய மூன்று கட்சிகளிலும் இருந்து பிரேரிக்கப்பட்டார்கள்

இந்த திறந்தவெளி வாக்கெடுப்பின் போது தமிழர் விடுதலை கூட்டனி சார்பாக போட்டியிட்ட காத்தமுத்து கோணேஸ் 15  வாக்குகளால் பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டார்.

Photos : Today Maruthamunai


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *