பெரியநீலாவணை அக்பர் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் தின நிகழ்வு.

பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும் இதன் மூலமே பிள்ளைகளின் கல்விவளர்ச்சியை உயர்ந்த நிலைக்குக் கொண்ட செல்ல முடியும் என கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார்.

பெரியநீலாவணை அக்பர் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் தின நிகழ்வு சனிக்கிழமை(24-02-2018)பாடசாலை மண்டபத்தில் அதிபர் ஏ.எம்.ஜிப்ரி தலைமையில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் 168 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்ற ஒரே ஒரு மாணவி ஜஹாங்கீர் யாபியா நௌப்பிட்கு துவிச்சக்கர வண்டியை பரிசளித்தார்.கற்பித்த ஆசிரியை திருமதி ஐனுஸ்ஸிபாயா ஷாஜஹானுக்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீம் பரிசுப்பொதி வழங்கினார். இங்கு வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் எடுக்கும் சிரத்தையினாலேயே பாடசாலைக் கல்வியின் அபிவிருத்தி தங்கியுள்ளது.

2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை கல்வியிலும் பௌதீகவளத்திலும் துரித வளர்ச்சியடைந்து செல்வதென்பது அதிபர் ஏ.எம்.ஜிப்ரி,ஆசிரியர் குழு, பெற்றேர்கள்,பாடசாலை அபிவிருத்திச் சங்க குழவினர்,அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தினர்,ஏ.எஸ்.எப் அமைப்பினர் போன்றோர் பாடசாலையின் மீது கொண்டுள்ள பற்றினைக் காட்டுகின்றது. குறிப்பாக ஒருபாடசாலை ஆரம்பிக்கப்படும்போது முதலில் தரம் 01 வகுப்புக்கான அனுமதியே வழங்கப்படும்.ஆனால் முதல் தடவையிலேயே பலவகுப்புகளை ஆரம்பித்து தரம் உயர்த்தப்பட்டது இப்பாடசாலை வளர்ச்சியின் முதற்படியாகும்.அதற்காக எமது மாகாணக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் அவ்வப்போது இப்பாடசாலை தொடர்பில் எடுக்கின்ற தற்துணிவான முடிவுகளும் இதன் வளர்ச்சிக்கு ஒரு பிரதானமான காரணமாகும்.அதனால்தான் இங்கு கற்கின்ற மாணவர்கள் பலசாதனைகளை சுமக்கின்றவர்களாகத் திகழ்கின்றார்கள்.

மாணவர்கள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து திகழ ஆசிரியர்களின் கற்பித்தல் மாத்திரம் போதாது அத்துடன் பெற்றார் தினமும் வீடுகளில் பிள்ளை கற்றுக்கொண்டவைகளை மீட்டிப் பார்ப்பதில் அவர்களுக்கு உதவ வேண்டும்.அப்போதுதான் ஆசிரியர்களும் மாணவர்களின் விடயத்தில் அதிக கவனம் செலுத்தி மாணவர்களையும் பாடசாலையையும் முன்னேற்றத்தின் பாதையில் இட்டுச் செல்வார்கள். புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றி பெறுவதுதான் ஒரு மாணவனின் திறமை என்பதற்கில்லை தற்போது பெரும் பதவிகளில் இருக்கின்ற அதிகமானவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என்பதையும் நாம் கருத்தில் கொண்டு எமது பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்க முயற்சிக்க வேண்டும்.

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் இம்மாணவர்கள் சித்திபெறுவதென்பது பெரும்சாதனை. ஏனென்றால் புதிய பாடசாலை தன்னுடைய கல்வி மற்றும் ஏனைய அபிவிருத்திகளின் ஸ்த்திரமான நிலைக்கு வருவதற்கு நீண்ட காலம் எடுகின்ற நிலையில் இங்குள்ள ஆசிரியர்களின் அயராத உழைப்பினால் இப்பாடசாலையானது துரிதமாக முன்னேறிக்கொண்டு செல்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு இந்நிகழ்வில் 70 புள்ளிகளுக்குமேல் பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதோடு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.இந்நிகழ்வில் “அக்பர் இளம்பரிதி” நூல் வெளியீடும் இடம்பெற்றது. கல்முனை கல்விவலைய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.எல்.ஏ.றஹீம், எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் அஷ்செய்க் யூ.எல்.சஜீத் (சலபி),மஸ்ஜிதுல் அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசலின் தலைவர் ஐ.எல்.எம்.பாறூக்,முன்னாள் தலைவர் வை.எல்.அன்ஸார் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

(பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.டபள்யு.எம்.ஜெஸீல்)

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *