மர்ஹூம் ஏ.டி.எம்.பஸ்லி அவர்களுக்கான குருநாகல் மாவட்டத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற வேட்பாளர் டொகடர் ஷாபி அவர்களின் அனுதாபச் செய்தி.

7.8.2016 இன்று திங்கள்கிழமை காலை வபாத்தான அறிவிப்பாளர் ஏ.டி.எம்.பஸ்லி அவர்களின் மறைவு குறித்து குருநாகல் மாவட்டத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற வேட்பாளர் டொகடர் ஷாபி சிஹாப்தீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தமது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும்தெரிவித்துக் கொள்கின்றது.

எங்களை விட்டு பிரிந்த ஊடகவியலாளர் அறிவிப்பாளர் சகோதரர் ஏ.டி.எம்.பஸ்லி மிகவும் எழிமையாக நம்மிடையே வாழந்த ஒருவராகும்.
அவர் மெடிகெ மிதியாலையை சேர்ந்த ஒருவராக இருந்த போதிலும் கூட அறிவிப்பாளர் மற்றும் உடகவியலாளர் என்ற றீதியில் இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்களுடன் நெருக்கமான தொடர்பை வைத்திருந்ததுடன் முஸ்லிம் ஊடகவியலாளர்களின் நலன்களிலும் அக்கறை காட்டினார்.
அவருக்கு அரசியல் றீதியாக பல சவால்கள் ஏற்பட்ட போதெல்லாம் எம்முடன் ஒற்றுமையாகவும் அன்பாகவும் இருந்து கடந்த காலங்ளில் என்னுடைய அரசியல் வளர்ச்சி க்காகவும் அதன் உயர்வுக்காகவும் மறைந்த சகோதரர் ஊடகவியலாளர் அறிவிப்பாளர் ஏ.டி.எம்.பஸ்லி பாடுபட்டார்.
சகோதர இனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுடனும் நெருக்கமான உறவை மர்ஹூம் அறிவிப்பாளர் ஏ.டி.எம்.பஸ்லி பேணி வந்தார்.
இந் நிலையில் அவர் வபாத்தான செய்தி எங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை வழங்குவானாக என பிராத்திக்கின்றோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *