கல்முனை மாநகர சபை சபா மண்டபத்தின் ஏற்பாடுகளை பிரதி அமைச்சர் ஹரீஸ் பார்வையிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் கல்முனை மாநகர சபைக்கு இன்று (2) வெள்ளிக்கிழமை விஜயம் செய்து மாநகர சபை அமர்வு நடைபெறும் சபா மண்டபத்தின் ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

கடந்த காலங்களில் 19 உறுப்பினர்களை கொண்டமைந்திருந்த கல்முனை மாநகர சபைக்கு வட்டார தேர்தல் முறைக்கு அமைவாக இம்முறை 41 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநகர சபை உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவகையில் சபா மண்டபம் மீள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை பிரதி அமைச்சர் ஹரீஸ் பார்வையிட்டதோடு புதிய உறுப்பினர்களின் முதல் அமர்வு ஏற்பாடுகள் தொடரிபில் ஆணையாளர் ஜே. லியாகத் அலியுடன் கலந்துரையாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *