தேசிய பாரிசவாத சங்கத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள தேசிய பாரிசவாத விழிப்புணர்வு நடைப்பயணம் இம்முறை மட்டக்களப்பில்

கிழக்கின் சகல பாகங்களிலும் பாரிசவாதம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பாரியபாதநடை, பாரிசவாதத்தடை என்ற தொனிப்பொருளில் 2018 தேசிய நடைபவனி நடைபெறவுள்ளது. இலங்கையில் பாரிசவாத அமைப்பின் ஏற்பாட்டில் 2018ஆம் ஆண்டுக்கான தேசிய பாரிசவாத நடை பவனி மட்டக்களப்பில் எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த நடைபவனி கல்லடிப்பால சிறுவர் பூங்காவில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நிறைவுபெறவுள்ளதுடன், இந்நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொள்வாரெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் இது தொடர்பாக StrokeWalk 18 ஏற்பாட்டுக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

 
 
தேசிய பாரிசவாத சங்கத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள தேசிய பாரிசவாத விழிப்புணர்வு நடைப்பயணம்
 
உலகலாவிய ரீதியில் உயிர்கொல்லும் அல்லது ஊனமாக்கும் நோய்களில் பாரிசவாதம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஆறுபேரில் ஒருவருக்கு பாரிசவாதம் தாக்கக்கூடிய சாத்தியங்கள் உண்டு. இலங்கை தேசிய பாரிசவாத சங்கமானது இலங்கையில் பொதுமக்களுக்கான விழிப்பூட்டல் நடவடிக்கைகளையூம் சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் பாரிசவாத நோயாளர்களின் பராமரிப்பாளர்களுக்கான பயிற்சிப்பட்டறைகளையூம் நடாத்துவதனூடாக பாரிசவாத பராமரிப்பையூம், பாரிசவாத தடுப்பிற்குரிய நடவடிக்கைகளையூம் ஊக்குவிப்பதிலும் ஈடுபட்டுவருகின்றது. 
 
பாரிசவாத நடைப்பயணமானது கடந்த காலங்களில் கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய மாநகரங்களில் நடைபெற்ற போதிலும் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவிருக்கிறது. 
 
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொள்வாரொன எதிர்பார்க்கப்படும் இந்த தேசிய பாரிசவாத நடைபயணம் 24ம் திகதி மாசி மாதம், 2018 ம் ஆண்டு கல்லடி, பாடுமீன் பூங்காவிலிருந்து ஆரம்பித்து வெபர் மைதானத்தில் முடிவூபெறும். நடைபயணத்தின் இறுதியில் குருதியமுக்கம், குருதியில் சீனியின் அளவு என்பன இலவசமாக பரிசோதிக்கப்படும். இம்மாபெரும் நிகழ்வை முன்னிட்டு பாடசாலைகளிடையே சுவரொட்டிப்போட்டியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு இறுதிநிகழ்வில் பரிசில்களும் வழங்கப்படவுள்ளது.
 
அத்துடன் இந்நிகழ்வில் தாங்களும் கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைத்து நிற்பதோடு இந்நிகழ்வு சிறப்புடன் நிறைவேற தங்கள் ஒத்துழைப்பையூம் வேண்டிநிற்கின்றோம். 
வைத்தியர் க. மரியானோரூபராஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *