மருதமுனையைச் சேர்ந்த சுஹால்ஸ் பிர்தெளஸ் (அனோஜ்) சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்

மருதமுனையைச் சேர்ந்த சுஹால்ஸ் பிர்தெளஸ் (அனோஜ்) நாளை (15.02.2018)இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்கின்றார்.

வோல்வகம்ப்டன் பல்கலைக்கழக (University of Wolverhampton) சட்டமாணி சிறப்புப் பட்டதாரியான இவர் (LL.B Hons),2015 ஆம் ஆண்டு இலங்கை சட்டக்கல்லூரிக்குஅனுமதிக்கப்பட்டு (Srilanka Law College) தனது சட்டக்கல்லூரிக் காலத்தில் இலங்கை சட்டக்கல்லூரியின் சட்ட மாணவர் முஸ்லிம் மஜ்லிசில் (Law Students’ Muslim Majlis) இரு தடவைகள் நிருவாக சபை உறுப்பினராக கடமை புரிந்திதுள்ளார்.

மேலும் சட்ட மாணவர் பெளத்த சகோதரத்துவம்அமைப்பின் (Law Students’ BudhistBrotherhood) பிரதித்தலைவராக கடமையாற்றிய முதல் முஸ்லிம் மாணவன் என்னும் வரலாற்றுப் பதிவினைக் கொண்டுள்ளார்.

இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டத்தரணிகள் பரீட்சைகளில் (Attorney at Law Exams)சிறப்பாக சித்தியெய்திய இவர், இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் (Attorney General’s Department of Srilanka) ஜனாதிபதி சட்டத்தரணி பர்சானா ஜெமீலின் வழிகாட்டலின் கீழ் பிரதி மன்ராடியார் அதிபதி (Deputy Solicitor General)  வருணிகா ஹெட்டிகேயின், கனிஸ்ட சட்டத்தரணி பயிலூனர் மாணவனாக பயிற்சி பெற்று இன்று இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்கின்றார்.

மருதமுனை அல்மனார் மத்திய கல்லுரியின் பழைய மாணவரான இவர் மருதமுனையைச் சேர்ந்த உதவிக் கல்விப்பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம் பிர்தௌஸ் – சித்தி சபீனா தம்பதியின்சிரேஸ்ட புதல்வராவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *