வாக்களித்த அனைத்து மக்களுக்கும் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் நன்றி தெரிவிப்பு

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் 2ஆம் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிட்டு 887 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற சிரேஸ்;ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்; வாக்களித்த பெரியநீலாவணை 2ஆம் வட்டார மக்களுக்கு நன்றி தெரிவித்து நன்றி அறிக்கையொன்றை வெளிட்டுள்ளார்.

அந்த நன்றி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-என்னை வெற்றி பெறச் செய்வதற்காக கடந்த ஒரு மாத காலமாக என்னோடு இணைந்து பாடுபட்ட அனைத்து ஆதரவாளர்களுக்கும்,வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்த அனைத்து வாக்களர்களுக்கும் என் இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்னை வெற்றி பெறச் செய்த 2ஆம் வட்டார மக்களின் தேவைகளை இனங்கண்டிருக்கின்றேன் அவற்றை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவதற்கு என்னால் முடிந்தவரை முயற்சிகளை எடுப்பேன்.தொடர்ந்தும் மக்கள் என்னோடு இணைவதன் மூலம் பரஸ்பர பரிந்துணர்வுடன் எனது பணியை முன்னெடுக்க முடியும்.
மேலும் என்மீது நம்பிக்கை வைத்து கட்சியின் சார்பாக என்னை வேட்பாளராக நிறுத்திய எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்தக் கொள்கின்றேன் என சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்.இந்த நன்றி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *