பொய் வாக்குறுதிகளையும்,போதை தரும் விடயங்களையும் நிராகரித்து கருத்துக்கு மட்டும் மக்கள் தந்த வெற்றி ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இரா.ராஜேந்திரா

பொய் வாக்குறுதிகளையும்போதை தரும் விடயங்களையும் நிராகரித்து கருத்துக்கு மட்டும் மக்கள் தந்த வெற்றியாகவே எமது வெற்றியைக் கருதுவதாக தெரிவித்து ஈரோஸ் ஜனநாயக முன்னணி பொதுச் செயலாளர் இரா.ராஜேந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:-நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஆலையடிவேம்பு பிரதேச சபையில்; பத்து வட்டாரங்களில்(10)ஆறு(6)வட்டாரங்களில் வெற்றி பெற்றி பெற்று ஆறு உறுப்பினர்களைப் பெற்;றிருக்கிறோம்.ஏனைய நான்கு வட்டாரங்களில் மிக சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வட்டாரத்திற்கான பிரதிநியை பெறமுடியாமல் பொய்விட்டது.
இதே வேளை திருககோயில் பிரதேச சபையிலும் ஒரு உறுப்பினரைப் பெற்றுள்ளோம்.இருந்தாலும் எமது ஈரோஸ் ஜனநாயக முன்னணி மீது நம்பிக்கை வைத்து எமக்கு ஆதரவு வழங்கி வாக்களித்த ஆலையடிவேம்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட அனைத்து வாக்காளப் பெருமக்களுக்கும் பத்திரிக்கை வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
ஏனைய பேரினவாதக் கட்சிகளின் பொய்யான வாக்குறுதிகளையும், போதை தரும் விடயங்களையும் நிராகரித்து எமக்கு வாக்களித்த மற்றம் வாக்களிக்காத எல்லா மக்களின் பிரேதேச அபிவிருத்தியையும்,பிரதேச சபை அதிகாரத்துக்குட்பட்ட வகையிலான அத்தனை செயற்பாடுகளையும் மக்கள் சார்ந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் செயற்படுத்த எண்ணியுள்ளோம.;
10 வட்டாரத்திலும் அறுதிப் nரும்பாண்மையுடன் நாம் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பிருந்தும் அவ் வாய்ப்பை நாம் பெற்றுக் கொள்ள முடியாமல் போனதற்கு தேசியம் தேசியம் என வாய்கிளியப் பேசுகின்ற தேர்தல்கால தமிழ் தேசிய வாதிகளே காரணமாய் அமைந்தது கவலைக்குரிய விடயமெனவும் அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்
அத்துடன் மலையகத்தில் நோர்வூட்,அம்பேகமுவ,மஸ்கெலிய,ஆகிய பிரதேச சபைகளில் இலங்கை கம்யூஸ்ட் கட்சியுடன் இணைந்து ஈரோஸ் ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை களமிறக்கியிருந்தோம் அவ்வேட்பாளர்களுக்கு வாக்களித்த 2500 இற்கும் மேற்ப்பட்ட வாக்காளப் பெருமக்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு எமக்கு அளிக்கப்பட்ட இவ்வாக்குகளை மலையக மக்களின் உரிமைசார் அரசியலுக்கான அங்கீகரமாகக் கொண்டு மலையகத்தில் எமது செயற்பாடுகளை ஈரோஸ் ஜனநாயக முன்னணி முன்னெடுக்கும் என்பதனையும் கூறி வைப்பதாக அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *