கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஹஜ் யாத்திரைக்கு செல்வதில் விடுமுறை பெறுவது தொடர்பில் காணப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சாதகமான நடவடிக்கை

கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஹஜ் யாத்திரைக்கு செல்வதில் விடுமுறை பெறுவது தொடர்பில் காணப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்,

கிழக்கு மாகாண ஆளுனருடன் இடம்பெற்ற பிரத்தியேக சந்திப்பின் போதே பல சாதகமான தீர்மானங்கள் குறித்து கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கவனம் செலுத்தியுள்ளார்.

 

இதற்கு முன்னர் கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மற்றும்  மற்றும் உத்தியோகத்தர்கள் ஹஜ்கடமையை பூர்த்தி செய்வதில் சில சிக்கல்களை எதிர்கொண்டு வந்தனர்,

இந்த நிலையில் தமது ஐம்பெருங்கடமைகளுள் ஒன்றான ஹஜ்கடமையை நிறைவேற்றவதற்கான விடுமுறையை பெற்றுக் கொள்வதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் முறையிட்டிருந்தனர்.

 

இதற்கமைவாகவே கிழக்கு முதலமைச்சர் ஆளுநரிடம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது இந்த விடயம் தொடர்பில் சாதகமாக தீர்மானங்கள் எட்டபட்டுள்ளதுடன் எதிர்வரும் தினங்களுள் இது தொடர்பான இறுதித்தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *