ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்; கே.எம்.அப்துல் றஸாக் (ஜவாத்)அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்தார்.

டயஸ்போராவின் ஆலோசனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வழி நடாத்தும் தலைவரின் கீழ் செயற்பட முடியாததால் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் நேற்று(18-12-2017)திங்கள்கிழமை காலையில் இணைந்து கொண்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக உறுப்பினரும்,பிரதிப் பொருளாளரும், உயர்பீட உறுப்பினருமான கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுபப்பினர் கே.எம்.அப்துல் றஸாக் (ஜவாத்)தெரிவித்தார்.
முகநூலில் வெளியான செய்தியை அறிந்து அவரிடம் வினவிய போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.எனது தனிப்பட்ட நலனுக்காக நான் கட்சி மாறவில்லை மக்களின் நலனுக்காகவே கட்சி மாறியுள்ளேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு,கிழக்கு இணைப்புக்கு ஆதரவு வழங்கி வருகின்றது இது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படுகின்ற பாரிய துரோகமாகும்.இதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாகத்தலைவர் மர்ஹூம் எம்.எச்;.எம்.அஷ்ரபின் கொள்கையில் முஸ்லிம் சமூகத்திற்காக அரசியலில் பயணிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பணியில் இணைந்து செயற்பட முடிவுசெய்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *