2017 இன் அபிவிருத்தி வேலைகளை இவ்வருட இறுதிக்குள் முடிக்குமாறு பணிப்புரை – செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில்

ஏறாவூர் நகர சபைப் பிரதேசத்தில் முடிவுறுத்தப்படாதுள்ள 2017 ஆம் ஆண்டிற்குரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பார்வையிடுவதற்கான நேரடி கள விஜயத்தினை ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் நகர சபையின் உத்தியோகத்தர்கள் கொண்ட குழுவினர் நேரடி கள விஜயத்தை மேற்கொண்டு அவ்வேலைகளை பார்வையிட்டு பார்வையிட்டனர்.
மேற்படி கள விஜயத்தில் ஏறாவூர் பள்ளியடி கொங்கிரீட் வடிகான் அமைத்தல், தைக்கா குறுக்கு வீதி வடிகான் மற்றும் கருமாரியம்மன் கொங்கிரீட் வடிகான் அமைத்தல் போன்ற வேலைத்திட்டங்களை பார்வையிட்டதன் பின்னர் குறித்த வேலைத்திட்டங்களை இவ்வருட இறுதிக்குள் முடிவுறுத்தப்படல் வேண்டும் என்றும் இது மழை காலம் என்பதால் எவ்வித தாமதங்களுமின்றி இந்த வேலைகளை இரவு பகலாக முன்னெடுத்தார் மாத்திரமே குறித்த வேலைகளை நிறைவு செய்யமுடியும் என்றும் நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பணிப்புரையும் விடுத்தார்.
இந்தக் கள விஜயத்தின்போது நகர சபையின் நிருவாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.குசைன், உள்ளூராட்சி உதவியாளர் ஏ.ஏ.ஆரிப் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எம்.அன்ரனி, எஸ்.தயாளன் உள்ளிட்ட பலர் இந்த கள விஜயம் மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *