வித்தியா படுகொலை வழக்கில் விடுதலையான சந்தேகநபரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு பிரிதொரு வழக்கின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சந்தேகநபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பி அறிக்கையின்படி கடத்தல் , கூட்டுகற்பழிப்பு மற்றும் கொலை ஆகிய வழக்குகளின் சாட்சியாளரை அச்சுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

எனவே வித்தியா வழக்கின் ட்ரயல் அட்பார் மன்றில் சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையின் பிரதிகளை பெற்றுக் கொள்ளுமாறு கடந்த தவணையின் போது நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

எனினும் இதுவரை அந்த பிரதிகள் ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு கிடைக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *