மியான்மார் அகதிகளுக்குரிய பாதுகாப்பை வழங்க பிரதி அமைச்சர் அரசிடம் வேண்டுகோள்.

ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் கல்கிசையில் தங்கவைக்கப்பட்டுள்ள மியான்மார் அகதிகளுக்கு தேவையான பாதுகாப்பை அரசும் பொலிசாரும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் இன்று (26)செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது வேண்டுகோள்விடுத்தார்.

இலங்கை கடற்பரப்பில் தத்தழித்த மியான்மார் அகதிகளை கடற்படையினர் கைது செய்து பின்னர் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் கல்கிசையில் சட்ட ரீதியான ஏற்பாடுகளுக்கு அமைவாகவே அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை இனவாதிகள் சுற்றி வளைத்து காடைத்தனமான முறையில் வெளியேற்றியுள்ளனர். இது தொடர்பில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே மேற்படி வேண்டுகோளை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தஞ்சமடைந்துள்ள மியான்மார் அகதிகளை இனவாதிகள் சுற்றி வளைத்து காடைத்தனமான முறையில் அவர்களை அச்சுறுத்தி வெளியேற்றியதோடு முஸ்லிம்களை தூசித்துள்ளனர். இனவாதிகள் சட்டத்தை கையிலெடுத்து தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றார்கள்.
அம்மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு மத்தியில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அம்மக்களை இந்நாட்டின் அரசாங்கமும் பொலிசாரும் உரிய பாதுகாப்பை வழங்கி அவர்களுக்கான நல்லதொரு விடிவைத் தேடிக்கொடுக்க வேண்டுமென பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *