கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா-2017

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்தும் கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா-2017 நேற்று(31-07-2017).மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி வளாகத்தில் இருந்து ஆரம்பமாகியது.

தமிழ்,முஸ்லிம்,பாரம்பரிய கலை,லாச்சார,விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில் பாடசாலை மாணவர்களின் பண்பாட்டுப் பேரணி இடம்பெற்றது.கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையில் நிகழ்வு ஆரம்பமாகியது.
பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி,தகவல் தொழில்நுட்பக்கல்வி முன்பள்ளிக்கல்வி,விளையாட்டு,பண்பாட்டலுவல்கள்,இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி கலந்து கொண்டார்.அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்;டனர்.
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி பண்பாட்டுப் பேரணி பிரதான வீதி வழியாக கல்முனை பஸ் நிலையத்தைச் சென்றடைந்து அங்கிருந்து திரும்பி 10.00 மணியளவில் விழாவின் பிரதான மண்டபமான கல்முனை உவெஸ்லி உயர்தரபாடசாலை மண்டபத்தைச் சென்றடைந்தது.
முதலாம் நாள் அரங்க நிகழ்வு ஆய்வரங்கம் கிழக்கின் சமகால இலக்கிய முயற்சிகள் என்ற தலைப்பில் காலை10.30 மணிக்கு அன்புமணி அரங்கில் ஆரம்பமாகியது ஓய்வு நிலை அதிபர் கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியர் எம்.ஜிப்ரி ஹஸன்,விரிவுரையாளர் கலாநிதி சு.சிவரெத்தினம்,திரைப்படப் படைப்பாளி காசிநாதர் ஞாதாஸ்,சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.சந்திரசேகர் ஆகியோர் ஆய்வரங்கில் பங்குபற்றினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *