எதிர்வரும் ஆண்டுகளில் அதிகமான நிதிகளை ஒதுக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு ஊடாக எதிர்வரும் ஆண்டுகளில் அதிகமான நிதிகளை ஒதுக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும் அதற்காக சில நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். சில வேலைத்திட்டங்களை இன்னும் அதிகமான சிறப்பான வேலைத்திட்டமாக மேற்கொள்வதற்கும் இன்னும் பல பிரதேசத்தங்களில் அதிகமாக சுகாதார சேவைகளை மேற்கொள்வதற்கான திட்டங்கள் உள்ளதாலும் அடுத்த வருடம் அதிகமான நிதியை ஒதுக்க முயற்சித்து அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். எனவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு ஊடாக கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களை ஆராயும் கூட்டம் இன்று (19) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் அனைத்து நிதிகளும் 04 பிராந்தியங்களுக்கும் ஒதுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் எவ்வித குறைபாடுகளும் இன்றி நடைமுறைப்படுத்தப்பட்டது. அவ்வாறன சிறு பிழைகளாவது எமது சுகாதார அபிவிருத்தியில் இருந்தால் அதனை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறும் மாகாண சபையின் இறுதிக்காலம் இருப்பதால் எமக்கு யோசனை இல்லை இன்னும் பல அபிவிருத்தி திட்டங்களை அடுத்த வருடம் மேற்கொள்ள அதிகாரிகள் பிரயத்தனம் எடுத்து மேற்கொள்வதல் அவசியம் என அமைச்சர் கோரிக்கொண்டார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதிகள் பிராந்தியங்கள் ரீதியாக எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது பற்றியும் அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், தொடர் வேலைலளின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும், குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து 91 வேலைகளின் நிலைப்பாடுகள்தொடர்பாகவும், சுகாதார சேவைகள் செயற்றிட்ட நிதியிலிருந்து மேற்கொள்ள்ப்பட்ட 189 வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 09 வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், சமூக சேவைகள் திணைக்களத்தினால் 19 வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஊடாக 06 வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், சுதேச திணைக்களத்தின் ஊடாக 16வேலைத்திட்டங்களும், கிராமிய மின்சார திணைக்களம் ஊடாக 37 வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு அதன் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் அதில் உள்ள குறைபாடுகளை அங்கு அமைச்சர் தலைமையிலான குழு ஆராய்ந்தது. கிழக்கு மாகாணத்திற்கு மத்திய அரசியால் ஒதுக்கப்பட்ட நிதிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மாகாணப் பணிப்பாளர், சுதேச திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர், சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *