மரநடுகை நிகழ்வு

ஹெம்மாதகம அல் – அஸ்ஹர்  மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் ஓர்அங்கமாக நேற்று மரம் நடும் நிகழ்வுஇடம்பெற்றது.

 

ஹெம்மாதகம பிரதேசத்தின் 1000 மரங்களைநடும் இயக்கம் பாடசாலை வளாகத்தில்நேற்று வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. முதலாம் படத்தில் பாடசாலை வளாகத்தில் தேசிய கீதம்இசைத்து நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்படுவதனையும் இரண்டாம் படத்தில்ஹெம்மாதகம கபுரக்க விஹாரையில்  மரம்நடும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட முன்ஹெம்மாதகம பள்ளிவாசல்கள்சம்மேளனத்தின் தலைவர் எம்.எச்.எம்.யூஸுப்உரையாற்றுவதையும் விஹாதிபதி அகிலஇலங்கை ஜம்மியதுல் உலமாவின் உதவிச்செயலாளர் மௌலவி எம்.எஸ்.எம். தாசிம் ஆகியாரை படங்களில் காணலாம்.

இந்நிகழ்வில் ஸ்ரீ.ல.க.அமைப்பாளர் லதீப்பாரூக், வலயக்கல்விப் பணிப்பாளர்எஸ்.எம்.விஜயரத்ன பண்டார,உதவிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம். நஜிம்,அதிபர் எம். பாஹிம், முன்னாள் அதிபர்களானஎம்.ஏ.எம். நிஸ்தார்,எம். ஜே.எம். நஜிமுதீன்,முன்னாள் பிரதேச உறுப்பினர்களானஎம்.ஆர்.எம். லியாவுதீன், எம்.ஆர்.எம். ரிஸாஆகியோர் உட்பட பல பிரமுகர்களும்மாணவர்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *