பெரியநீலாவணை அக்பர் கிராம கடற்கரை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம்;

கல்முனை மாநகர சபையின் வழிகாட்டலில் பெரியநீலாவணை,அக்பர் கிராம கடற்;கரை பிரதேசத்தை இருக்கை வசதிகளை அமைத்து அழகுபடுத்தும் வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (10-09-2017)மாலை கடற்கரையில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மருதமுனை அமைப்பாளரும்,மத்திய குழுவின் தலைவருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் இஸட்,ஏ.நஸீர் அகமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வேலைத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக்;(ஜவாத்) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் இஸட்,ஏ.நஸீர் அகமட் அவர்களினால் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சின் முப்பது இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் வேலைத்திட்ட அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இந்த அங்குரார்ப்பணம் நிகழ்வில் முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக்;(ஜவாத்)கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி,ஆசியா மன்றத்தின் செயற்திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப் ஆகியோர் விஷேட அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
அதிதிகளாக முதலமைச்சின் பிரதம கணக்காளர் ரி.பரமேஸ்வரன்,கல்முனை மாகர சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர்,எம்.எஸ்.உமர் அலி,சட்டத்தரணி எப்.எம்.அமீறுல் அன்ஸார் மௌலானா,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை பிரதேச இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் எம்.எச்.தாஜூதீன்(சறோ)உள்ளீட்ட ஊர்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *