நாளை மாமனிதர் அஷ்ரஃப்பின் நினைவு தின நிகழ்வு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 17வது நினைவு தினத்தை முன்னிட்டு கத்தமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனையும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் கல்முனைக் காரியாலயத்தில் நாளை (16) சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை மசூரா குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் யு.எல்.ஏ கரீம் ஹாஜியார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம பங்கேற்புனராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்,பங்கேற்புனர்களாக மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், உலமாக்கள், ஹாபிழ்கள், கட்சியின் போராளிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது மறைந்த தலைவரின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளது.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் கல்முனைக் காரியாலயமானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காரியாலயமாக கடந்த 28 வருடங்களாக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் காலத்திலிருந்து இயங்கிவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *